கேள்வி: புத்த மதம் இந்தியாவில் தோன்றியது... ஆனால் அதற்கு இங்கே அவ்வளவு முக்கியத்துவம் தரபபடவில்லை... புத்தரின் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது... அதே போல் உங்களுடைய நேர்மறையான வாழ்க்கை முறைகள் ஏற்கப்படும் என்று கருதுகிறீர்களா?
உங்களுடைய சிறிய கேள்வியில் பல வினாக்கள் உள்ளன. புத்தமதம் இந்தியாவில் இறந்துவிட்டது. ஏனெனில் புத்தர் எதனோடும் சமரசம் செய்து கொள்வதற்கு தயாராக இல்லை.. அவர் வேதங்களுக்கும், கடவுளுக்கும் எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த போது அவருடைய செரிஸ்மெடிக் பெர்சனாலிட்டி பல லட்சக்கணக்கான மக்களை கவருவதாக இருந்தது. புத்தரின் கருத்துக்களால் குறிப்பாக பிராமணர்கள் அதிர்ந்து போனார்கள்.. அதனால் புத்தத்தை தழுவியவர்களை கொன்று குவித்தனர். அதில் தப்பி பிழைத்தவர்கள் இலங்கைக்கும், பர்மாவுக்கும், சீனாவுக்கும், ஜப்பானுக்கும் தப்பி ஓடினார்கள். ஆனால் அவர்கள் பரப்பியது புத்தத்தை அல்ல . புத்தர் எந்த சமரசத்தை விரும்பாதவராக இருந்தாரோ, அவரை பின் தொடர்ந்தவர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் அந்த நாட்டின் கலாசாரத்தோடு தங்களை இணைத்துக் கொண்டனர். திபெத்தில் தற்போது என்ன இருக்கிறது? அங்கே இறை தேடுதலுடன் புத்தம் கலந்து விட்டிருக்கிறது.. இதே போலதான் மற்ற நாடுகளிலும் அந்தந்த நாட்டின் இறை தேடுதலுடன் புத்தம் கலந்துவிட்டிர்க்கிறது. ஆனால் பவுத்தத்தின் சாராம்சம் முற்றிலுமாக சீரழிந்துவிட்டது. பரிணாம வளர்ச்சி இறந்துவிட்டது. புத்தத்தின் பெயரை அவர்கள் காப்பாற்றினார்கள். ஆனால் பவுத்தம் இறந்துவிட்டது. புத்தர் இறந்த போதே. எந்த ஒரு மதம் ஆனாலும் அதற்கு உரிய குரு இருக்க வேண்டும்.
Saturday, December 6, 2008
ஓஷோ ஒரு முகவுரை...
ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain, டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. புத்தர், கிருஷ்ணர், குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற பல்வேறு சமய ஞானிகளின் பங்களிப்புத் தொடர்பாகவும் இவர் கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.
Friday, December 5, 2008
இறையை தேடும் பறவை ....
இறையை தேடும் பறவையாக இந்த உலகத்தில் என்னுடைய இறைவனை தேடி இந்த வாழ்க்கை முழுவதும் கழிய வேண்டும்... மரணத்தில் அவனை சந்தித்துவிடுவேன் ..
நான் எத்தனையோ ஞானிகளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்... பலரை புத்தகத்தில் படித்ததுடன் சரி...
என்னுடைய எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் ஓஷோ வின் கருத்துகள் ஒத்து போகின... யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு நாங்களும் அவருக்காக பிளாக் போட்டுட்டோம்ல..
நான் எத்தனையோ ஞானிகளை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்... பலரை புத்தகத்தில் படித்ததுடன் சரி...
என்னுடைய எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் ஓஷோ வின் கருத்துகள் ஒத்து போகின... யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னு நாங்களும் அவருக்காக பிளாக் போட்டுட்டோம்ல..
Subscribe to:
Posts (Atom)